தேசிய சரணாலயத்தில் யானையை கொன்று, தந்தங்களை விற்பனை செய்த நபர்கள் கைது
மாதுருஓயா தேசிய சரணாலயத்தில் யானையொன்றை கொன்று, அதன் தந்தங்களை விற்பனை செய்த இரு நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலநறுவை பொலிஸ் விசேட அதிரடிபபடையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், வியாபாரிகளின் போர்வையில் சென்ற பொலிஸாருக்கு, இரண்டரை லட்சம் ரூபாவிற்கு குறித்த தந்தங்களை விற்பனை செய்வதற்கு, தயாராகவிருந்த போதோ குறிப்பிட்டநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யானை கூட்டத்திலிருந்த அதனை கொன்றதாக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரும், பொலநறுவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
0 comments :
Post a Comment