தமாரா குணநாயகம் எதற்காக மாற்றப்பட்டார்? நாமினி விஜயதாசவின் கட்டுரையின் சில பகுதி..
கடந்த மார்ச் மாத்த்தில் ஜெவாவில் அமெரிக்க ஆதரவுடன் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்காக பல அமைச்சர்கள், மூத்த இராஜ தந்திரிகள், மூத்த அரச பணியாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் அறிவுரையாளர்கள் என்று 71 பேர் சுவிட்சர்லாந்து மற்றும் பிற நாடுகளில் திரிந்து பாரிய முயற்சிகளை மேற் கொண்டனர். இனினும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. இந்த தோல்விக்கான பழி ஜெனிவாவில் இருந்த இலங்கையின் ஐ.நா.வுக்கான நிந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம் அம்மையார் மீது மட்டும் சுமத்தப்பட்டது. இதனால் அவருக்கும் இலங்கை நிரவாகத்துக்கும் இடையில் எழுந்த அருவருப்பான மோதல் காரணமாக இலங்கை உலக அளவில் கவலைப்படச் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
குணநாயகம் அவர்களுக்கு பிரேசில் அல்லது கியூபாவுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டும், அவருக்குப் பதிலாக பிரசல்சில் இருந்த ரவிநாத் ஆரியசிங்க ஜெனிவாவின் பிரதிநதியாக நியமிக்கப்பட்ட நிலையிலும், அவர் இடமாற்றக் கட்டளைக்குக கீழ்ப்படியாமல் தனது நிலைப்பட்டை வெளிப்படையாக ஊடகங்களுக்குத் தெரிவித்து வந்தார். அவரே ஒரு பலிக்கடாவாக ஆக்கப்பட்டிருப்பதால், தனது நிலையை வெளிப்படுத்த சகல வாய்ப்புகளையும் பயனபடுத்திக் கொள்கின்றார். இந்த விடயம் தொடர்பாக முதலில் இலங்கை வெளிநாட்டமைச்சே ஒரு சிங்கள ஊடகத்துக்கு, தான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக பொய்யான செய்தியை வழங்கி பிச்சினையை துவக்கி வைத்தது என்று குணநாயகம் குற்றம் சாட்டுகின்றார்.
இந்த கசப்பான சொற்போரானது இலங்கைக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட நாடுளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐ.நா. தீர்மானத்துக்கு முன்னரும் பின்னரும் நடைபெற்ற வெளிப்படையான மற்றும் திரைமறைவான செயற்பாடுகளை இந்த இடமாற்றம் வெளிக் கொண்டு வருவதாக வெளிநாடமைச்சுக்கு எழுதியுள்ள கடித்தில் குறிப்பிட்டுள்ளார் குணநாயகம். 18 வது கூட்டத் தொடருக்கான ஆயத்தங்களில் ஈடுபடுவது பற்றிய எந்த விதமான அறிவுறுத்தலும் வழிகாட்டலும் திறமுறைகளும் ஒத்துழைப்பும் தனக்கு வழங்கப் படவில்லை என்றும் தனது முன்மொழிவுக்கும் எந்தவித பதிலும் வழங்கப் படவில்லை என்றும் ஜீ.எல்பீரிசுக்கு எழுதிய கடிததில் மேலும் குறிப்பிட்டுள்ளார் குணநாயகம்.
ஜெனிவாவுக்குச் சென்று நேரடியாகப் பார்க்காமல், குணநாயகத்தை அகற்றும் அளவுக்கு நிலைமையை இட்டுச்சென்ற சூழ்நிலைகளைப் பற்றி தீர்மானிப்பது கடினம். எனினும் பல்வேறு தரப்புகளில் இருந்து கசியும் தகவல்கள் ஊடாக பல விடயங்கள் தொடர்பாக பொது முடிவுக்கு வரலாம்.
ஜெனிவாவில் இலங்கையின் தோல்விக்குப் பல காரணங்கள் இருக்கும்போது குணநாயகத்தை மாத்திரம் குறிவைப்பதுஅநீதி என்று அவர் சார்பானவர்கள் கூறுகிறார்கள். ஆனால், எண்பதுகளில், புலிசார்பு உலக கிறிஸ்தவ மாணவர் கூட்டமைப்பை பிரதிநித்துவப் படுத்திய தமாரா குணநாயகம் 87-ல் இலங்கைகு எதிராக பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை அன்றைய ஐ.நா. மனித உரிமை ஆணைணகுழுவில் சமர்ப்பித்திருந்தார் எனப் பலர் சுட்டி காட்டுகின்றனர் என்று கூறிய ஐ.நா. சென்ற தூதுக் குழுவில் பங்கேற்ற ஒருவர், கண்காணிப்பு எம்பியான சஜின்வாஸ் குணவர்தனாவே குணநாயகத்தை அப்புறப்படுத்த ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஜி.எல.பீரிசின் நிர்வாகத்துக்கு மேலாகச் செயல்பட்டுள்ளார். குணநாயகத்துக்கு எதிரான இன்னொரு சாரார் கூறுகிறார் தொழில்சார் இராஜதந்திரிகளுடன் ஒத்துழைப்பதில்லை என்று. ஜனாதிபதியால் வெளிநாட்டுச் சேவைக்கு மேற் கொள்ளப்பட்ட அரசியல் அடிப்படையிலான நியமனங்களால் தான் இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றன என்றும் இவ்வாறானவர்கள் நேரடியாக ஜனாதிபதியிடமிருந்து அதிகாரத்தைப் பெறுகிறார்கள் என்றும் இன்னொருவர் குறிப்பிடுகின்றார்.
லக்ஸ்மன் கதிர்காமர் வெளிநாட்டமைச்சராக இருந்த சமயத்தில் 65% மான இலங்கை வெளி நாட்டுத் தூதுவர்கள் இலங்கை வெளிநாட்டுச் சேவையில் (SLFS) இருந்து சேர்த்துக் கொள்ளப் பட்டதாகவும் 35% அரசியல் நியமனமாக இருந்தாகவும் கூறப்படுன்றது. இன்றோ ஜி.எல.பீரிசின் கீழ் இந்த விகிதாசாரம் தலைகீழாக மாறியுள்ளது. பல தூதரகங்களில் தொழில்சார் தூதுவர்கள் இல்லை. மிகப் பிரச்சினைக்குரிய வாசிங்டன் டிசி தூதரகத்தில் ஒரேயொரு SLFS அலுவலர்தான் இருக்கின்றார். புதுடில்லியில் எந்த அரச சேவையையும் சேராத எந்த தொழில் தகைமையும் அற்ற மூவர் இருக்கின்றார்கள் என்று அறிய முடிகின்றது. முதலில், இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதேவேளை, யார் தலைமை வகித்திருந்தாலும் ஜெனிவாவில் தோல்வியைத்தான் இலங்கை தழுவியிருக்கும் என்று சிந்தனையாளர் வட்டம் கூறுகின்றது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
கருத்துக் கூறிய ஒருவர் கூறுகிறார், மேற்கின் மீதான பைத்தியக்காரத் தனமான தாக்குதல்கள், மேற்கு நாட்டுத் தலைவர்களின் கொடும்பாவிகளை எரித்தல் என்பன உண்ணாட்டு மக்கள் மத்தியில் நன்றாக எடுபட்டாலும், உலக அளவில் இலங்கைகு உதவாது. வர்த்தகம், உதவி, முதலீடு மற்றும் உல்லாசப் பயணத்துறை போன்றவற்றில் நாம் மேற்கில் தங்கி இருக்கும் போது, புவியியல்சார் அடிப்படையில் இந்தியா பக்கம் இருக்க வேண்டிய நிலையில் ஆத்திர மூட்டும் நிலை கூடாது என்கிறார் முன்னாள் ஐ. நா. உதவிச் செயலாளர் நாயகம் ஜயந்த தனபால. வரியிறுப்பாளர்களான சிங்களம் பேசும் மக்கள் என்ன நடக்கிற தென்று புரிந்து கொள்ள முடியாது இருக்கிறார்கள். இங்கு பல பிச்சினைகள் இருந்தாலும், நாங்கள் நாகரீகமடைந்தவர்களாக வெளிநாட்டுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றோம் என்றார் பிறிதொருவர்.
நாங்கள் தடுப்பு இராஜ தந்திரத்தையே மேற்கொள்கின்றோம். இது மேற்கு நாடுகளை மேலும் மேலும் தூர விலக்குகின்றது. பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறினார், சண்டை செய்ய வேண்டும். இராஜதந்திர ரீதியாக சண்டையிடுவது, எதிரிகளை பழித்துரைப்பதில் இருந்து வேறுபட்டது.
0 comments :
Post a Comment