கொழும்பு மாநகர சபையின் மேயர் முஸம்மிலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் எதிரகட்சி தலைவர் மொஹமட் மவுரூப் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொழும்பு மாநகர சபையின் மேயர் முஸம்மில் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநகர சபையின் சில விதிகளை மீறியமைக்காகவே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவுள்ளோம் எனவும், மேயர் ஊழல் புரிந்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment