மாரடைப்பு வராமல் தவிர்க்க, மஞ்சள் உதவுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கனடாவில் உள்ள, சுவாசக் கோளாறு ஆராய்ச்சி மைய நிபுணர்களின் ஆய்வுகளின் மூலமாக இது கண்டறியப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்
மஞ்சளில், மஞ்சள் நிறத்தை தருவது, அதில் உள்ள,"கர்குமின்" எனப்படும் ஒரு கலவை. அதில் ரசாயன சத்து உள்ளது. இதை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, மஞ்சளில் உள்ள சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது புற்றுநோய் கட்டி ஏற்படாமல் தடுக்கிறது. இரத்தக்குழாய்களில் அடைப்பு வராமல் தடுக்கிறது. பாக்டீரியா தாக்குதலை முறியடிக்கிறது என தெரிவித்துள்ளனர்.
மஞ்சளில் உள்ள "கர்குமின்" இரசாயனம், உடலில் உள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. இதயத்தில் ரத்தக்குழாய் சுருங்குவதற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கும் அதிக அளவில் புரோட்டீன் உற்பத்தியாவது தான் காரணம் எனவும் அதை இந்த இரசாயனம் தடுக்கிறது எனவும் தெரிவித்துளளனர்.
ஜீன்களில் உள்ள குரோமோசோம்களில் கோளாறு இருந்தால் தான், இதய வால்வுகள் பாதிப்படைந்து புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அங்கேயே அந்த கோளாறுகளை,மஞ்சள் சத்து தடுத்துவிடுகிறது எனவும் எங்களின் முதல் கட்ட சோதனையில், எலிகளுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளோம். ஆனால், மஞ்சளை அதிகமாகவும் பயன்படுத்தக்கூடாது. எந்த அளவு வரை பயன்படுத்தலாம் என்பதை இப்போது ஆராய்ந்து வருகிறோம். என்று நிபுணர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment