இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் பிரஜைகள் இருவர் கைது
டுபாயில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒருவரின் பயணப்பையில் இருந்து 2 கிலோ 70 கிராம் ´மெத்த அம்பிட்டமின்´ எனும் போதைப் பொருள்மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சந்தேக நபர்கள் விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment