யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆறாவது நாளாகவும் தொடர்ந்து வகுப்பு பகிஷ்கரிப்பு
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து ஆறாவது நாளாகவும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 18 ஆம் திகதி முதல் கால வரையறையற்ற வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் 4 ஆம் வருட மாணவனும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக பரிந்துரை செய்யப்பட்டவருமான பரமலிங்கம் தர்சானந் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமை. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவ புலனாய்வு பிரிவினர் நடமாட்டம் அதிகரித்துள்ளமை ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment