Wednesday, May 30, 2012

காணி உரிமைகளை பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்

காணி உரிமைகளை பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டத்தைகாணி மைச்சு ஆரம்பித்துள்ளது. நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 82 சதவீதமானவை அரசுக்கு சொந்தமானதாகும். 18 சதவீதமான பகுதி மாத்திரமே தனியார் துறைக்கு சொந்தமென தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட காணித் துண்டுகள் ஒரு கோடி 20 லட்சம் அளவில் இருப்பதாக இணங்காணப்பட்டுள்ளது. இவற்றின் உரிமையை சிக்கலின்றி தீர்த்துவைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

காணிகளுக்கான உறுதிகள் இன்மையினால் பெரும்பாலானோர் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கிறார்கள். காணி அபிவிருத்திக்கு இது பாதகமான விளைவை ஏற்படுத்துகிறது.

புதிய வேலைத்திட்டத்தின் கீழ் காணிக்குச் சொந்தமான சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும். காணி உறுதிப்பத்திரத்தை விட இதற்கு கூடுதலான அங்கீகாரத்தைப் பெறுவது வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். அரசாங்க செலவில் காணிகளை அளவிட்டு உறுதிகளை தயாரிப்பது வரையிலான சகல நடவடிக்கைகளையும் இதன் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியமென்று அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com