Tuesday, May 29, 2012

தனிராஜ்யம் கோரவில்லயென ஆர்.சம்பந்தன் தெரிவிப்பு

தனி ராஜ்யம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டில் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என அதன் தலைவர் பாராளளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டின் போது 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

இதன் போது இலங்கையில் தமிழர்களுக்கான தனி ராஜயம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.

இது தொடர்பில் ஊடமொன்று பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தனை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த கருத்தை அவர் நிராகரித்துள்ளார்.

ஒரே இலங்கையில் சமஉரிமையுடன் தமிழர்களும், சிங்களவர்களும் வாழக்கூடிய தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாக சம்பந்தன் தெரிவித்ததாக அற்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

1 comments :

Anonymous ,  May 29, 2012 at 8:06 PM  

TNA head is reasonable and trying to walk on the correct peaceful path
which could bring calm and harmony
to the country. Well said Sir,thank you.It's a miracle the way he changed his tone.In future Srilanka would enjoy the peace and prosperity

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com