முட்டை உடலுக்கு ஆபத்தானது – கனேடிய ஆராய்ச்சியாளர்களின் முடிவு
உணவகங்களில் விற்கப்படும், தயாரிக் கப்படும் உணவுகளைவிட முட்டை உடலுக்கு அதிகம் தீங்கானது எனவும் முட்டையில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது எனவும் இருதய நோய் சம்பந்தமான ,கனடாவின் மருத்துவர்கள் இந்தப் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
கனடாவில் தற்போது அதிகளவு உண்ணப்படும் கோழி மறறும் சீஸ் கலந்த சான்ட்விச் உணவில் 150 மில்லிகிராம் கொலஸ்ட்ரோலே கலந்துள்ளது. ஆனால் ஒரு முட்டையில் மாத்திரம் 215 முதல் 275 மில்லிகிராம் கொலஸ்ட்ரோல் கலந்துள்ளது.
நீரிழிவு,கொலஸ்ட்ரோல் மற்றும் இருதய நோய்ப் பிரச்சினை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 200மில்லிகிராமுக்கும் குறைவான கொழுப்பு உணவையே உட்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கியமானவர்கள் கூட 300 மில்லிகிராமுக்கு மேல் கொழுப்பு உட்கொள்ளக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஒன்ராறியோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்தப் புதிய கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment