Thursday, May 31, 2012

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற கோருவது சாதாரண மக்கள் அல்ல - கோதாபய

வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றக் கோருவது அங்கு வாழும் சாதாரண மக்கள் அல்லர். வடக்கின் அரசியல் அதிகாரத்திலிருந்து சரிந்து செல்லும் தமிழ்க் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளே இவ்வாறு கோருகின்றன. கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களைப் பார்க்கிலும் அநுராதபுரம் - பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ளதை அந்த அமைப்புக்களுக்கு சுட்டிக்காட்ட தாம் விரும்புவதாக பாதுகாப்பு, செயலர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆனால் அநுராதபுர - பொலன்னறுவை மக்கள் அந்த மாவட்டங்களில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு ஒருபோதும் கோஷம் எழுப்பவில்லை என்பதையும் அந்த அமைப்புக்களுக்கு சுட்டிக்காட்ட தாம் விருப்பமாக இருப்பதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

தெற்கில் மாவட்டங்களை வெவ்வேறாக எடுத்தாலும் இராணுவ முகாம் உள்ளதா?
தியத்தலாவை போன்ற பகுதிகளில் பொருளாதாரம் முழுமையாக சக்தி பெற்றுள்ளது. அங்கு இராணுவ முகாமும், அங்கு வசிக்கும் படை வீரர்களும் இதற்குக் காரணமாகும்.

இராணுவ முகாம் காரணமாக அவ்வப் பகுதிகளில் பொருளாதாரம் பலமடைந்துள்ளது. யாழ்ப்பாண மக்கள் இராணுவ முகாம்களுடனும், படை வீரர்களுடனும், எவ்வளவு ஒத்துழைப்புடன் வாழ்கின்றனர். இராணுவத்துக்குத் தேவையான சகல மரக்கறி வகைகளையும் நாம் யாழ். மாவட்டத்தில் இருந்தே பெறுகிறோம். மீனையும் வடக்கிலிருந்தே பெறுகிறோம். இந்த அபிவிருத்திகளுக்கு இன்று இந்த அரசியல் அமைப்புக்கள் அச்சம் கொண்டுள்ளன. முகாம்கள் எமது நாட்டுக்குள்ளேயே அமைந்துள்ளன. வெளிநாடுகளில் அல்ல. முகாம்கள் அமைய வேண்டிய இடங்களிலேயே முகாம்கள் அமைந்துள்ளன.

இருப்பினும் சில நாடுகள் தம்முடைய இராணுவ முகாம்களை வெளிநாடுகளில் அமைத்துக் கொண்டு எமது நாட்டில் அமைந்துள்ள முகாம்களை அகற்றக் கூறுகின்றனர். இன்று ரீ. என். ஏ. இயக்கத்துக்கு வடக்கில் உண்மையான மக்கள் அதிகாரம் இல்லை. இவர்களிடமிருந்து மக்கள் தூரமாகி வருகின்றனர்.

மக்கள் இராணுவத்தினருடன் சமீபமாகி வருகின்றனர். வட பகுதி மக்களுக்கு ஈழம் தேவையில்லை. அவர்களுக்கு மீண்டும் யுத்தம் தேவையில்லை. அவர்களுக்கு உண்மையான சுதந்திரமே தேவைப்படுகிறது. மனிதர்களாக வாழ தேவைப்படுகிறது. இவ்வாறு பாதுகாப்பு செயலர் தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  June 1, 2012 at 11:14 AM  

Stage players and who dramatize things cannot give protection to the public,but the armed pesronnel can do atleast something to the public.For sure public need the real protection,as they are helpless.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com