ஜனநாயகம் என்பது பொன்சேகாவை விடுதலை செய்வதல்ல – அனுர
நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது மட்டும் காணாது என்று கூறுகிறது மக்கள் விடுதலை முன்னணி. உலக நாடுகள் அரசாங்கத்துக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக அரசாங்கம் தான் உருவாக்கிய இராணுவ நீதிமன்றத்தால் தண்டணை விதிக்கப்பட்டு சிறையிலடைத்திருந்த பொன்சேகா அவர்களை விடுதலை செய்கின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் பா.ம.உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கா கூறினார்.
அரசாங்கம் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கோ அல்லது வேறு நல்ல நோக்கத்திலோ அல்ல என்று திசாநாயக்க குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment