Friday, May 4, 2012

ஒபாமாவின் இளம் வயது காதல் லீலை அம்பலம்: புதிய புத்தகத்தால் சர்ச்சை.

அமெரிக்க அதிபர் ஒபாமா மீது இதுவரை எந்தவிதமான செக்ஸ் புகாரும் எழுந்ததில்லை. அவர் மீது உலக மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். ஆனால் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்ற பழமொழிக்கு ஏற்ப ஒபாமாவும் செக்ஸ் லீலையில் கைதேர்ந்தவராக இருந்த விவகாரம் தற்போது வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஜெனிவியூவ் குக். இவர் ஆஸ்திரேலிய தூதரின் மகள். இவர் அமெரிக்க அதிபர் ஒபாமா குறித்த சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அது விரைவில் வெளிவர உள்ளது.

அதில் ஒபாமாவுக்கும் தனக்கும் இருந்த காதல் மற்றும் செக்ஸ் உறவு பற்றி எழுதியுள்ளார். கடந்த 1980-ம் ஆண்டுகளில் நியூயார்க்கில் குக் தங்கியிருந்தார். அப்போது ஒபாமாவுக்கு 20 வயது இருக்கும். குக் இவரைவிட 3 வயது மூத்தவர். தொடக்கத்தில் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் இருவரும் நெருக்கமாக பழகியதாகவும் அப்போது செக்சில் ஈடுபட்டதாகவும் அவர் எழுதியுள்ளார்.

இதுதவிர விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் நியூயார்க்கில் மேல்சட்டை எதுவும் அணியாமல் சராங்கு எனப்படும் நீண்ட துணியினால் ஆன உடையை அணிந்து ஒபாமா சுற்றி திரிவார் என்றும் தனது சுயசரிதை புத்தகத்தில் குக் கூறியுள்ளார்.

மேலும் அவர் அமெரிக்காவின் இனவெறியால் மிகவும் மனம் வருத்தம் அடைந்து இருந்தார். அதை எதிர்த்து போராடி வாழ்க்கையில் முன்னேறி அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியை அடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் மற்றும் சிகாகோவில் இளம்வயதில் தனக்கு ஏற்கனவே சில பெண் நண்பர்கள் இருந்ததாக ஒபாமா நாகரீகமாக ஒப்புக் கொண்டார். ஆனால் அவரது செக்ஸ் லீலைகள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளன. இது 2-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்த நேரத்தில் அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com