Saturday, May 12, 2012

கருஜயசூரிய மற்றும் மாகாண சபை உறுப்பினர் அனில் ரத்தநாயக்கவிடம் விளக்கம் கோரல்

பாராளுமன்ற உறுப்பினர் கருஜயசூரிய மற்றும் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் அனில் ரத்னாயக்க ஆகியோரிடம் விளக்கங்களை கோருவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் சட்டத்துறை பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து கிடைத்த அறிவுறுத்தலுக்கு அமைய சட்டத்துறையினர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொள்ளாமை மற்றும் எதிர்கட்சியை விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றமை போன்ற விடயங்கள் குறித்து கரு ஜயசூரியவிடம் விளக்கம் கோரப்படவுள்ளது.

சட்டக்குழுவின் உறுப்பினரான சட்டத்தரணியொருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் வடமத்திய மாகாண சபையை கலைப்பதை தவிர்க்குமாறு கோரி நீதிமன்ற உத்தரவொன்றை பெற்றுக்கொண்டமை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் அனில் ரத்தநாயக்கவிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com