கொலை குற்றச்சாட்டிலில் நபர் ஒருவருக்கு மரணதண்டனை
நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகளின் போது குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரத்ன மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன் நீதிமன்றில் ஆஜராகாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள பிரதிவாதியை கைது செய்யுமாறு திறந்த பிடிவிறாந்தை பிறப்பித்தார்.
கொச்சிக்கடை - போருதொட்ட பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவருக்கே மரண தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி கொச்சிக்கடை - போருதொட்ட பிரதேசத்தை சேர்ந்த திருமணமான நபர் ஒருவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்ததாக பிரதிவாதி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
0 comments :
Post a Comment