ஜேர்மனியில் ஏஞ்சலா மேர்க்கலின் கட்சி பாரிய பின்னடைவை சந்திக்கின்றது.
ஜேர்மனியில் இடம்பெற்ற மாநில தேர்தலில் ஜேர்மன் சான்சிலர் ஏஞ்சலா மேர்க்கலின்; கிறிஸ்தவ ஜனநாயக கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. நேற்று மேற்கு ரயின் வெஸ்ட் பாலியா மாநிலத்திற்கான இடை தேர்தல் நடைபெற்றது. இதில் பொதுவுடமை ஜனநாயக கட்சி 38 வீத வாக்குகளையும் ஏஞ்சலா மேர்க்கலின் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி 25.5 வீத வாக்குகளையும் பெற்றது. பசுமை கட்சிக்கு 12 வீதமான வாக்குகளும், ஜனநாயக சுதந்திர கட்சிக்கு 8.5 வீதமான வாக்குகளும் கிடைத்தன.
இதற்கு முன்னர் நடைபெற்ற மாநில தேர்தல்களோடு ஒப்பிடும் போது கிறிஸ்தவ ஜனநாயக கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment