ஐந்து கோடி ரூபா பெறுமதியான 5.7 கிலோ தங்கத்தை அனுமதியின்றி சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்த ஓட்டுநர் ஒருவர் கட்டுநாயக்கா சுங்கப் பிரிவினரால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சங்கிலி, வளையல், பிரஸ்லெட், பதக்கம் போன்ற தங்க நகைகளை மடிக்கணினி பையில் கொண்டு வந்ததாகக் கூறப்படும் அந்த ஓட்டுநர் வியாபாரியாக சிங்க்கபூருக்குப் போயிருந்தார். கொழும்பு, கெய்சர் வீதியில் வசிக்கும் அவர் 12 தடவைகள் சிங்கப்பூருக்குச் சென்றிருப்பதாக அவரின் கடவுச் சீட்டு கூறுகின்றது. பிரதிச் சுங்க அதிகாரி சனத் பெர்ணான்டோ, சுங்கப்பணிப்பாளர் சனத் ஜயசிங்க மற்றும் பிரதிச் சுங்கப் பணிப்பாளர் எம். பாஸ்கரன் ஆகியோர் பரிசோதனையைச் செய்தனர்.
No comments:
Post a Comment