நீர்கொழும்பு வலய பாடசாலைகளுக்கிடையிலான பக்தி கீதப் போட்டி(படங்கள்)
நீர்கொழும்பு வலய பாடசாலைகளுக்கிடையிலான பக்தி கீதப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் நீர்கொழும்பு நிவ்ஸ்டட் மகளிர் கல்லுரியில் இடம்பெற்றது.
2600 சம்புத்தத்வ ஜயந்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த பக்தி கீதப் போட்டியில் கோட்ட மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கிடையில் வலய மட்டத்தில் கனிஸ்ட மற்றும் சிரேஸ்ட என இரு பிரிவுகளாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.
நீர்கொழும்பு வலயகல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் மேற்பார்வையில் விஷேட மற்றும் முறைசாரா கல்விப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் உபாலி மதுரப் பெருமவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில், நீர்கொழும்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.ஏ.சி.பெர்னாந்து உதவிக் கல்விப் பணிப்பாளர்களான அன்ரணி, பியசேன பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
>
0 comments :
Post a Comment