கொழும்பு நகர் உலகின் முதற்தர நகரங்களில் ஒன்றாக மாற்றியமைக்கப்படும் (படங்கள்)
கொழும்பு நகரை உலகின் முதற்தர நகரங்களில் ஒன்றாக மாற்றியமைக்க, பாரிய கொழும்பு நகர அபிவிருத்தி கருத்திட்டம் மற்றும் அதன் வெற்றிகரமான அமுலாக்கம் உதவுமென பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாரிய கொழும்பு மற்றும் நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் அங்குராப்பண நிகழ்வுகள் இன்று காலை பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏஜில் இடம்பெற்ற போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரின் நேரடி வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பின் கீழ், உலக வங்கியின் 223 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுடன் 3 வருடகாலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்தின் ஊடாக, கொழும்பின் வெள்ளப் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் பாரிய கொழும்பு உள்ளூர் அதிகார அமைப்புகளுக்கான நகர அபிவருத்தி, உட்கட்டமைப்பு புனரமைப்பு,போன்ற முக்கிய நடவடிக்கைகளுக்கு கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளன.
இங்கு உரை நிகழ்திய, இலங்கைக்கான உலக வங்கிப் பணிப்பாளர் டயாரி டியஸ் கயே, மஹிந்த சிந்தனையில் பாரிய கொழும்பு அபிவிருத்தி தொடர்பாக வலியுறுதப்பட்டுள்ளது எனவும், இலங்கையின் 50சதவீதமான பகுதிகள் தற்போது நகரமயமாக்கப்பட்டுள்ளது எனவும், உலக வங்கியானது பாரிய கொழும்பு நகர அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கியுள்ளதுடன் பாரதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளரின் சிறந்த தலைமைத்துவத்தையும் பாராட்டியுள்ளார்
இந் நிகழ்வில் தூதுவர்கள், இராஜதந்திரிகள், கொழும்பு பிராந்தியத்தின் மேயர்கள், உலக வங்தி பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள் உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
1 comments :
When comparing the other cities around the world Defence secretary's
ideas to design the Colombo city to equalize with the wonderful cities around the world is highly appreciated.We need dramatic changes in our country and not the lip services.
Post a Comment