நாம் ஆசியர்களை ஏற்றுமதி செய்வமே தவிர இறக்குமதி செய்யமாட்டோம் என்கிறார் அமைச்சர்.
இந்தியாவிலிருந்தோ வேறு எந்தவொரு நாட்டிலிருந்தோ தமிழ் மொழி மூல ஆசிரியரகள் வரவழைக்கப்பட மாட்டார் இலங்கை ஏனைய நாடுகளுக்கு ஆசிரியர்களை அனுப்பும் நாடன்றி வெளிநாடுகளிலிருந்து ஆசிரியர்களை வரவழைக்கும் நாடு அல்லவென கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டம் வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என பிரிக்கப்படவில்லை. தமிழ் பிரதேசங்களுககு தேவையாளன பட்டதாரிகளும் நியமனம் வழங்குவோரிடமிருந்து தெரிவு செய்யப்பட்டு அப்பகுதிகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர். வெளிநாடுகளுக்கு ஆசிரியர்களை வழங்கும் ஒரு நாடே இலங்கை. மீபேயில் யுனேஸ்கோ எமக்கு வழங்கியிருக்கும் பயிற்சி கல்லூரி தெற்காசியாவிற்கு ஆசிரியரகளை வழங்க வழியமைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டது. எமது ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க இந்தியாவின் உதவியை பெற்றுக் கொள்கிறோம். அதுவல்லாமல் இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை நாம் வரவழைக்கவில்லை. எமது ஆசிரியர்களை நாம் மாலைதீவிற்கு அனுப்பியிருக்கின்றோம். உத்தியோகபூர்வமாக விடுமுறை பெற்று ஏனைய நாடுகளில் பணிபுரிகின்றார்கள். வடக்கு கிழக்கு என்ற பேதமின்றி சகல பகுதிகளுக்கு சமமான முறையில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும்.
0 comments :
Post a Comment