புதையல் தோண்டுவோரை கைது செய்ய விசேட நடவடிக்கைகள்!
தொல்பொருள் பெறுமதிமிக்க பிரதேசங்களில், புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காக, பொலிஸார் மேற்கொண்டு வரும் சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் இடம்பெறுமென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களில், அபன்பொல மற்றும் மதவாச்சி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, இவ்வாறு புதையல் தோண்டிய 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதவாச்சி, தல்கஹவௌ மற்றும் அபன்பொல ஆகிய பிரதேசங்களில் புராதன பெறுமதி வாய்ந்த பிரதேசங்களில் புதைப்பொருள் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே, இவர்கள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர். இதுபோன்ற சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment