சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
அதிகரித்துள்ள சிறுவர் துஷபிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த இரு நாட்களில் ஒன்பது சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குஉட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிறுவர் துஷபிரயோகங்கள் இடம்பெறுவதனை தடுக்கும் வகையில் விஷேட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்புரைக்கமைய இந்த வேலைதிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, சிறவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சட்டங்களை வலுப்படுத்தும் நடவடி;க்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறி;விக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment