இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதியை தாக்கிய தனியார் பஸ்சாரதியை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காயங்களுக்கு உள்ளான போக்குவரத்து சபையின் பஸ் சாரதி நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணியளவில் சீதுவை சேனாநாயக்க வீதியில் இடம்பெற்றுள்ளது.
எஸ்.எம்.பெர்னாந்துபுள்ளே என்பவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டவராவார்.
சீதுவை ரத்தொழுகமையிலிருந்து நீர்கொழும்புக்கு சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதியை சந்தேக நபரான தனியார் பஸ் சாரதி குறித்த வீதியில் பயணிகளை ஏற்ற வேண்டாம் என்று இதற்கு முன்னர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 75 பேருக்கு மேற்பட்ட மாணவர்களுடனும் பயணிகள் சிலருடனும் குறித்த போக்குவரத்து சபை பஸ் சேனாநாயக்க வீதியில் வந்து கொண்டிருக்கும் போது இடைமறித்து தனியார் பஸ்சாரதி தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதி கட்டுநாயக்க பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபரான தனியார் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment