சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இராணுவச் சிப்பாய் கைது
அநுராதபுர நொச்சியாக பிரதேசத்தில் 15 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இராணுவச் சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இராணுவ சிப்பாய்களும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் என தெரிவித்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு இராணுவச் சிப்பாய் தலைமறைவாகியுள்ளதாகவும், சந்தேக நபரை கைது செய்யவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
0 comments :
Post a Comment