இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் அமைக்கப்- படுவதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு!
இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் மீண்டும் அமைக்கப்படுவதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. 20 வருடங்களுக்கு முன் இஸ்ரேல் தூதரகம் இலங்கையில் செயற்பட அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் இஸ்ரேல் தூதுரகம் இந்தியாவிலேயே செயற்பட்டுவந்தது. ஆனால் இன்று ஜனாதிபதியினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பலஸ்தினுடன் நல்லுறவைப் பேணிவரும் இலங்கை பலஸ்தீனத்திற்கு ஒரு முகத்தையும் இஸ்ரேலுக்கு வேறொரு முகத்தையும் காட்டி முஸ்லிம்களை ஏமாற்றுவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமானா ஹஸன் அலி இது தொடர்பில் கட்சி ஆராய்வதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவிருப்பதாகவும் தொரிவித்துள்ளார்.
1 comments :
முஸ்லிம்களை ஓரம் கட்ட வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்ட விடயமாச்சே... இனி என்ன பேசுவது தீர்மானிப்பது. தம்புள்ளை பள்ளிவாயலே இஸ்ரவேலின் திட்டம்தானோ என என்னத்தோன்றுகின்றது.இனி இலங்கையில் மட்டும் ஏன் முஸ்லீம்கள் நிம்மதியாக வாழவேண்டும்.(எதிரியின் எதிரி நன்பன்தானே)
Post a Comment