எண்பதுகளின் மத்தியில் இலங்கைப் பயங்கரவாதத்துக்கு இந்தியா உடந்தையாக இருந்தது
இந்தியா வகித்த பங்கு முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார் ஜனாதிபதியின் செலாளர்.
எண்பதுகளின் மத்தியில் இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளைத் திடமிடுவதிலும், நிறைவேற்றுவதிலும் இந்திய புலனாய்வலுத்துறை பெரும் பங்காற்றியுள்ளது என்று ‘கோட்டபாயாவின் போர்’ நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கூறினார். அவர் மேலும் கூறியதாவது 2009 ஏப்ரலில் போரை நிறுத்துமாறு இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் என்பன கடும் அழுத்தம் பிரயோகித்தன என்றார்.
ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டபாயாவின் போர்க்கால பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக எழுதப்பட்ட நூலின் வெளியீட்டு விழா இந்தியா மீது வசைபாடும் விழாவாக அமைந்தது. இந்திய பயங்கரவாதிகளுக்கு காலத்துக்குக் காலம் உதவியும் ஊக்கமும் அளித்து வந்தது. இங்கிருந்த இந்தியத் தூதுவர் இலங்கைக்கு நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருந்தார்.
வடமராட்சி ஒப்பரேஷன் ஆரம்பித்த போது, பயங்கரவாதத்தை இலகுவில் முறியடித்திருக்க முடியும். ஆனால், அன்றைய இந்தியப் பிரதமர் ஒப்பரேஷனுக்கு எதிரான கடுமையான அறிக்கை விடுத்தார். அப்போது இலங்கையில் இந்தியாவின் தூதுவராக இருந்த ஜே.என்.திக்சித்பெருந் தலையீடு செய்து கொண்டிருந்தார் என்று பெருந்திரளான தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள், ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா போன்றோர் வீற்றிருந்த இந்த விவில் வீரதுங்க கூறினார். நுலை வாசித்துக் காட்டிய அவர், வடமாராட்சிப் போர் நடைபெற்ற சமயத்தில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவை சந்தித்த திக்சித், யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் விழுவதை இந்தியா கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்காது என்றும் ஒப்பரேசன் தொடர்ந்தால், புலிகளுக்கு ஆயுத உதவு வழங்கப்படும் என்றும் எச்சரித்ததாகவும் வீரதுங்க குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment