முப்படைகளின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளார்.
இவர் எதிர்வரும் 7 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என அவரின் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இராணுவ சேவையிலிருந்த இராணுவ வீரர்களை சரத் பொன்சேகா தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிற்கு எதிராகவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment