இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையத்துடன் இணைந்து நடத்தும் புண்ணிய கிராமம் செயலமர்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (3-6-2012) நிர்கொழும்பு – கொச்சிக்கடை, ஹேன்முல்லையில் அமைந்துள்ள அருள்மிகு கருமாரி அம்மன் ஆலயத்தில் காலை 8.30 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.சண்முகநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
No comments:
Post a Comment