காதல் தகராறால் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தாயும் மகளும் பலி.
கண்டி, குளுகம்மன பகுதியில் இராணுவ வீரரொருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளதுடன் குறித்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காதல் தொடர்பு ஒன்றினால் உண்டான பிரச்சினையினாலேயே இத்துப்பாக்கிப பிரயோகம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment