நாட்டில் ஜனநாயகம் இல்லாததால் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினாராம் தேரர்.
அண்மையில் பூதாகரமாக வெடித்த தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரத்திற்கு பொறுப்பான விகாராதிபதி இமாலுவலு சுமங்கல தேரர் சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பேட்டியின் தமிழாக்கம் வருமாறு. :
நிரஞ்சலா : நீங்கள் விகாரையின் நிலத்தில் இருப்பதாக சொல்லப்படும் ஒரு பள்ளி கட்டிடத்தை எதிர்த்து இரண்டாவது தடவையும் கவனத்தை பெற்றுள்ளீர்கள். இந்த ஆர்பாட்டத்தில் இருந்தும் எதிர்காலத்தில் பின்வாங்குவீர்களா ?
இனாமலுவ: இல்லை ஒரு தடவை நாம் பாடம் கற்றுகொண்டோம். இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லை என்பதை கற்றுகொண்டோம். யாராவது , எதேச்சாதிகாரமாக ஆட்சி செய்தால் , அது ஜனநாயகத்திற்கு எதிராக இருந்தால் , நாங்கள் உயிருக்கு பயப்படாமல் அதை எதிர்ப்போம் .
நிரஞ்சலா : எப்படி ஜனநாயகம் இல்லாத ஒரு அரசாங்கத்தை எதிர்க்க முடியும் என்று கருதுகிறீர்கள் ?
இனாமலுவ: அதை நாம் அண்மையில் காண்பித்தோம்'.
நிரஞ்சலா :வன்முறை மூலமாகவா ?
இனாமலுவ: ஆம் , அது பகுதியளவில் உண்மையானது . நாம் அமைதி பூர்வமாகவே -ஆர்பாட்டத்தை- ஆரம்பித்தோம். ஆனால் மக்கள் உணர்ச்சி அதிகரிக்கும்போது அதை கட்டுப்படுத்த முடியாது போய்விட்டது . இதை தேசிய மட்டத்திலும் , சர்வதேச மட்டத்திலும் காணலாம் தீவிரவாதிகளான பின் லாடன் போன்றவர்கள் என்ற செய்தார்கள் ? அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ய இரத்தம் சிந்தினார்கள் .அதுதான் உண்மை .
எங்கள் மக்கள் பெளத்த கலாச்சாரத்தை சூழ கனவுகளையும் , எதிர்பார்ப்புகளையும் கட்டியுள்ளார்கள் அவர்கள் பொறுமையாக இருக்கிறார்கள் ஆனால் இங்கு அந்த பொறுமை சற்று ஓரத்தில் வைக்கப்பட்டது. நான் இதை வன்முறையாக பார்கவில்லை .
நிரஞ்சலா : பௌத்தம் பொறுமையை போதிக்கிறது. ஆனால் நீங்கள் ஒரு பகுதி பௌத்தர்களுக்கு எதிர்மறையாக செயல்பட தலைமை தாங்கினீர்கள் அது ஏன் ?
இனாமலுவ: இல்லை. அதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது .இது அரசாங்கம்தாம் அப்படியான செயலை செய்தது . 30 வருடங்களுக்கு முன்னர் விகாரையையும் அதனை சூழவுள்ள நிலத்தையும் பாதுகாக்க ஒரு திட்டம் இருந்தது . அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தாததன் மூலம் அரசாங்கம் மக்களை -ஆர்பாட்டதிற்கு – நிற்பந்தித்துள்ளது . அவ்வாறு செய்வதற்கு மக்கள் என்னை வேண்டினார்கள் என்று நீங்கள் கூறினால் அது சரியானதாகும் . அதற்கு அரசாங்கமும் பொறுப்பு கூறவேண்டும் .
நிரஞ்சலா : இந்த ஆர்ப்பாட்டம் அவசரமாக செய்யப்பட்டது இல்லை என்பதை கூறினீர்கள். பௌத்தர்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு .அரசாங்கம் அவர்களை பொறுமையற்றவர்களாக ஆக்கியுள்ளது. அரசாங்கமே இதற்கு பொறுப்பு என்றும் கூறினீர்கள் அதன் பின்னர் இஸ்லாத்தை பரப்ப எப்படி பின் லாடின் வன்முறையாக செயல்பட்டார் என்று கூறுனீர்கள். அப்படியானால் மதத்தின் பெயரால் இரத்தம் சிந்தப்படவேண்டும் என்று நம்புகிறீர்களா ?
இனாமலுவ: ஆம் நீங்கள் கூறியது உண்மை , அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் , ஆனால் 20 ஆம் திகதி இரத்தம் சிந்தப்படவில்லை .
நிரஞ்சலா : 20 ஆம் திகதி நீங்கள் ' இன்று நாங்கள் எங்கள் கையில் பெளத்த கொடியுடன் வந்தோம் . ஆனால் அடுத்த முறை இது வித்தியாசமாக இருக்கும்' என்று பகிரங்கமாக கூறினீர்கள். அப்படியானால் அடுத்த முறை மதவன்முறை ஏற்பட்டு , இரத்தம்சிந்தும் நிலை ஏற்பட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு கூறுவீர்களா ?
இனாமலுவ: அதற்கான பொறுப்பை இந்த நாட்டின் செயலற்ற ஆளும் தரப்புதான் பொருப்பு கூறவேண்டும் . இந்த பள்ளியை பற்றி அவர்களின் அரசாங்கத்தின் முஸ்லிம் தலைவர்கள் பொய்களை பரப்புகிறார்கள் .இந்த நாட்டின் பிரதமர் இதன் மீது ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளார் என்பதை அவர்கள் கண்டிப்பாக விளங்கிக் கொள்ள வேண்டும் .
பிரதமர் இந்த நாட்டின் இரண்டாவது குடிமகன். அவர் பெளத்த சாசன அமைச்சரும் கூட. அவர் அரசாங்கத்தின் முடிவை பிரதிபலித்துள்ளார். அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்துள்ளவர்கள், அமைச்சரவையில் தம்புள்ளையை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் அந்த தீர்மானதிற்கு எதிராக செயல்படமுடியுமா ? அமைச்சர் ஜானக பண்டார தென்னகோன் கூறுகிறார். அந்த பள்ளி அகற்றப்பட்ட மாட்டாது என்று , பிரதமர் கூறுகிறார் அந்த பள்ளி அகற்றப்படும் என்று ,அமைச்சர் ரவூப் ஹகீம் அந்த பள்ளி தொடந்து இருக்கும் என்று கூறுகிறார். இது அரசாங்கம் பிளவு பட்டுள்ளதை கட்டுகிறது , அத்துடன் அரசாங்கத்தில் பிரதமரை விடவும் பெரிய ஆட்கள் இருப்பதை இது காட்டுகிறது ,அப்படி இருக்க முடிமா ? அரசாங்கத்தினதும், அமைச்சரவையினதும் கூட்டு பொறுப்புக்கு என்ன நடந்தது ? அதனால்தான் இந்த ஒழுக்கமற்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகிறோம் .
நிரஞ்சலா : நீங்கள் அமைச்சரவையின் கூட்டு பொறுப்பு பற்றி பேசும்போது நான் உங்களுக்கு இலங்கை பல மதங்களை ,கலாச்சாரத்தை . பல இனங்களை கொண்ட நாடு என்பதை நினைவுபடுத்துகிறேன்.
இனாமலுவ: என்ன அர்த்தமற்ற பேச்சு , நீ அர்த்தமற்ற தத்துவம் ஒன்றை பேசுகிறார் . இந்த நாடு 14 மில்லியன் பௌத்தர்களை கொண்டது . எவ்வளவு முஸ்லிம்கள் இங்கு இருக்கிறார்கள் ?
உதாரணமாக தாய்லாந்தின் பெரும்பான்மையினர் பௌத்தர்கள் இமியன்மாரில் பெரும்பான்மையினர் பௌத்தர்கள். கத்தோலிக்கர்கள் வத்திகானில் பெரும்பான்மையினர். அதனால்தான் வத்திகான் கத்தோலிக்க நாடு என்று கூறுகிறோம். அதேபோன்றுதான் மத்திய கிழக்கு அதிகமான நாடுகள் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டுள்ளது. அதனால்தான் அவற்றை இஸ்லாமிய நாடுகள் என்று கூறுகிறோம் .
நிரஞ்சலா :என்னுடைய கேள்வி இதை குறிக்கவில்லை , ஒரு நாடு பல மதநம்பிக்கைகளை கொண்டிருக்கும்போது அவைகள் சம உரிமைகளை கொண்டிருக்க கூடாதா ? என்பதுதான் எனது கேள்வி.
இனாமலுவ: நீ எமது பெளத்த உரிமைகளை பறித்தெடுக்க முயல்கிறாயா ? நாம் அனைவரையும் மதித்தோம், இங்கு அவைகள் அல்ல பிரச்சினை , இது பெளத்த பாரம்பரியங்களை அழிப்பதில் இருந்து பாதுகாப்பதுடன் தொடர்பானது .
இங்கு அர்த்தமற்ற பேச்சு தேவை இல்லை . நாங்கள் 2500 ஆண்டுகால பெளத்த வரலாற்று பாரம்பரியங்களை பாதுகாக்க போராடுகிறோம். அது எங்களுடையது. அவர்கள் அதற்கு மாற்றமாக வரலாற்று பாரம்பரியங்களை அழிக்க முயற்சிக்கிறார்கள். எதார்த்தத்தை விளங்கிக்கொள்வது அனைவருக்கும் நல்லது.
நான் எமது உரிமைகளை பாதுகாக்க குரல் கொடுக்கிறேன் , மற்றவரின் உரிமைகளை ,சொத்துக்களை பறிப்பதற்காக அல்ல .இஸ்லாமிய வாதிகள்- தம்பியா -இங்கு வேறு ஒன்றை செய்ய முயற்சிக்கிறார்கள் .அதை அனுமதிக்க முடியாது .நாங்கள் ஒருபோதும் ஈராகிற்கு, மத்திய கிழகிற்கு இஸ்லாமியவாதிகளின் உரிமைகளை பறிக்கசெல்லவில்லை. இது ஒரு கொள்ளை. நீ இந்த முழு நாட்டிற்கும் இந்த நிலையை தெளிவாக சொல் .
நிரஞ்சலா : நீங்கள் ஒருவரின் உரிமைகளை பாதுகாக்க போராடும்போது மற்றவரின் உரிமையை மீறுகிறீர்கள் ?
இனாமலுவ: நீ பௌத்தர்களின் உரிமைகளை பறிக்க முயற்சிக்கிறாயா ?
நிரஞ்சலா : இல்லை . அவர்கள் பள்ளி 1962 ஆம் ஆண்டில் இருந்து இருப்பதாக சொல்கிறார்கள்.
இனாமலுவ: மூன்றாவது கண்னை கொண்ட ஒருவனை போன்று உன்னுடன் நான் பேசுவேன் .நான் உலகில் என்ன நடந்து கொடிருக்கிறது என்பதை பேசுகிறேன் .நான் உலகளாவிய ரீதியில் என்ன நடக்கிறது என்பதை ஒப்பிடுகிறேன் . உலகளாவிய ரீதியில் இஸ்லாம் மேலோங்கிக் கொண்டிருக்கிறது . சில சிங்கள பெயர் தாங்கிகள் அவர்களுக்கு கைகொடுகிறார்கள். நீ அப்படி செய்யவேண்டாம் என்று உன்னை கோருகிறேன் .
நிரஞ்சலா :உலகமயமாக்களில் நம்பிக்கை கொண்டவர் என்ற வகையில் 'கலப்பற்ற இனம்' தத்துவத்தை ஏற்று கொள்கிறீர்களா ?
இனாமலுவ: மிகச் சரியான கேள்வி : நான் உலகமயமாக்களை ஏற்று கொள்கிறேன். அதேபோன்று -மாற்று இன -இரத்தக் கலப்பற்ற சிங்கள இனமொன்றும் உண்டு என்று நம்புகிறேன். என்னை நான் அவ்வாறான ஒருவனான நம்புகிறேன் . ஆகவே யாராவது உங்களை போன்று கலப்பற்ற இனம் இல்லை என்று கூறினால் அதற்கு ஒருவன் காரணங்களை கூறினால் , நான் நினைக்கிறேன் அவர்கள் - மாற்று இன இரத்தக் கலப்பை கொண்டவர்கள். அதாவது அங்கு ஒரு வகை கலப்பு உண்டு என நினைக்கிறேன், அப்படியானவர்கள் கண்டிப்பாக தம்பி முதியன்சலாகே போன்ற பெயர்களை தங்களது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தில் வைத்துகொள்ள வேண்டும் .
0 comments :
Post a Comment