Thursday, May 31, 2012

விடை பெ‌ற்றா‌ர் ‌‌வி.கே.‌சி‌ங்; புதிய தளபதி விக்ரம் சிங்

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த விகே.சிங் இன்றுடன் ஓய்வுபெற்றதையடுத்து புதிய தளபதியாக ஜெனரல் விக்ரம்சிங் பொறுப்பேற்று‌க் கொ‌ண்டா‌ர். இவ‌ர் இர‌ண்டு ஆ‌ண்டு ப‌த‌வியி‌ல் இரு‌ப்பா‌ர். 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ராணுவத் தலைமைத் தளபதியாக வி.கே. சிங் பொறுப்பேற்றார். நேர்மையான அதிகாரி என்று போற்றப்பட்ட அவர், முதலில் வயது தொடர்பான சர்ச்சையில் சிக்கினார்.

ராணுவ செயலகக் கிளையில் அவரது பிறந்த தேதி மே 10, 1950 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெனரல் கிளையில் பிறந்த தேதி மே 10, 1951 என்று குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

பிரதமருக்கு இவர் எழுதிய ரகசிய கடிதம் பத்திரிகைகளில் வெளியானதால் மேலும் சர்ச்சை எழுந்தது. நாட்டின் ராணுவ வலிமை குறித்து ராணுவத் தளபதி எழுதிய கடிதம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தவிர, தரக்குறைவான கவச வாகனங்களை ராணுவத்துக்கு வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தனக்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ரூ. 14 கோடி லஞ்சம் அளிக்க முன்வந்தார் என்று கூறி மேலும் சர்ச்சையை எழுப்பினார்.

இ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த விகே.சிங் இன்றுடன் ஓய்வுபெற்றதையடுத்து புதிய தளபதியாக ஜெனரல் விக்ரம்சிங் பொறுப்பேற்று‌க் கொ‌ண்டா‌ர். 2 ஆண்டு 3 மாதங்கள் அவர் இந்த பதவியில் இருப்பார்.

புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் விக்ரம் சிங்குக்கு சுர்ஜீத் கெளர் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.

No comments:

Post a Comment