அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பில்
அரசாங்க வைத்தியர்கள் நாளை நாடாளாவிய ரீதியில் வேலை நிறுத்தம் செய்ய தீர்மானித்துள்ளனர்.
தமக்கு வாக்களித்தபடி போக்குவரத்துப்படியை உரிய காலத்தில் வழங்க அரசாங்கம் தவறியுள்ளதால் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மருத்துவ அதிகாரிகளின் அமைப்பு தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தரும் பதிலை பொறுத்து, நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த வேலை நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு தொடரலாம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
மருத்துவ அதிகாரிகள் அமைப்பை சேர்ந்த வைத்தியர்கள் அண்மையில் நடந்த மருத்துவ அதிகாரிகள் அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்க வேண்டுமென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment