Sunday, May 13, 2012

பல்கலைக்கழக அனுமதி முறையை பரிசீலிக்க குழுவொன்று நியமனம்.

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் முறைமைகளை ஆராய்வதற்காக, குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம், நியமிக்கப்பட்டுள்ள இக்குழு தற்போது அமுலில் உள்ள முறைமையில் குறைபாடுகள் நிலவுவதாக, பல்வேறு தரப்புகளிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் ஆராயும் என தெரியவருகின்றது.

மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில், கற்கை நெறிகளுக்கு மாணவர்களை தெரிவு செய்வது தொடர்பில், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக, அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது அமுலில் உள்ள திட்டங்களை உருவாக்கிய புத்திஜீவிகள் மற்றும் எதிர்தரப்பின் ஆலோசனைகளையும் ஆராய்வதற்காக, புதிய குழுவொன்றை அமைப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com