இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் வித்தியாசமான ஆய்வு ஒன்றை நடத்தினர். மனைவி மற்றும் காதலியை தவிர்த்து மற்றவர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்று இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளதொடர்பு வைத்திருந்தால் அது மனரீதியாக குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும். எனவே மேலும் செக்ஸ் உறவில் ஈடுபடும் போது அதிக பதட்டமும், ஆர்வமும் ஏற்படும். இது மாரடப்பை ஏற்படுத்துகிறது என்று அந்த ஆய்வு சொல்கிறது.
அதிலும் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்கள் குடித்து விட்டு உறவில் ஈடுபட்டால் அவர்களை அதிக அளவில் மாரடைப்பு தாக்கும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
செக்ஸ் உறவில் ஈடுபடும்போது சில நேரங்களில் மரணங்கள் நேரிடுவது உண்டு. இதில் மற்றவர்களை விட கள்ளதொடர்பில் ஈடுபடுபவர்களுக்கு 3 மடங்கு அதிக மரணங்கள் நிகழ்வதாக தெரிந்தது.
No comments:
Post a Comment