சவால்களை வெற்றிகொள்ள ஒரே ஆயுதம் கல்வியே..!
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை ஒலுவில் வளாக பல்கலைக்கழக பூங்காவில் நடைபெற்றது. வேந்தர் பேராசிரியர் ஏ.எம்.இஸ்ஹாக் தலைமையில், பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் முன்னிலையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இப்பட்டமளிப்பு விழாவில் விஞ்ஞானம், கலை, வர்த்தகம் மற்றும் வணிக முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த 454 உள்வாரி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இதன்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜெயந்த நவரட்ன பட்டமளிப்பு பேருரையை நிகழ்த்தினார். இரண்டாம் நாள் பட்டமளிப்பு வைபவம் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது.
0 comments :
Post a Comment