கஹவத்தை வரஹபிட்டிய பகுதியில் தீயில் எரிந்த வீடொன்றில் இருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சடலங்களும் 51 மற்றும் 58 வயதான சகோதரிகள் இருவருடையதென ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் இருவர் மட்டுமே சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்துவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment