Monday, May 28, 2012

போர்க்குற்றங்களை தேடும் குழுவே வர இருக்கின்றது. வர அனுமதியாதீர்கள்.

நவநீதம் பிள்ளையையோ அல்லது அவரது நிபுணர் குழுவினரையோ இலங்கையில் காலடி எடுத்து வைக்க இடமளிக்க வேண்டாம் என தெரிவித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அவசரக் கடிதமொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளது.

அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக முன் வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய விசேட செயற் திட்டத்தை வலுப்படுத்துவதற்கு அதிகாரமுள்ள குழுவே இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

எனவே இவர்களை நாட்டுக்குள் வருவதற்கு இடமளிப்பதானது ஜெனிவாவில் முன் வைக்கப்பட்ட எமக்கெதிரான பிரேரணையை ஏற்றுக் கொள்வதாக அமைந்துவிடுமென்றும் அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணைக் குழுவின் விசேட அறிவுரைகள் வழங்க என்று சொல்லி குழுவை அனுப்புவதற்கு முயற்சி செய்வது போர்க் குற்றங்களுக்கு சாட்சி பெறுவதற்காகவே என்று தேசபிதைசி தேசிய அமைப்பின் தலைவர் பேராசிரியர் கூறுகின்றது குணதாச அமரசேகர தான் கையெழுத்திட்டு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவரும் தகவல்கள் மற்றும் செய்தித்தாள்களின் படி ஜெனிவாவின் மனிதவுரிமை ஆணைக் குழுவின் விசேட தூதுக் குழுவை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு எமது வெளிநாட்டமைச்சுக்கு நவநீதம்பிள்ள்ளை கடிதம் அனுப்பியருக்கிறார். இது உண்மையில் ஜெனிவா தீர்மானத்தின் 3 ம் பிரிவுக்கு அமைய நியமிக்கப்பட்ட விசேட குழு தவிர வேறில்லை. மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் செயல் முறைகளுக்கு அமைய ஐந்து கண்டங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் 5 நிபுணர்களை நியமிக்க முடியும்.

இதற்கு முன்பு போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க சூடானுக்கு நிபுணர்களை அனுப்பினார்கள். அவர்களின் அறிக்கையின் படியே அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் விராசணை நடாத்தப்பட்டது. ஆகவே, இந்த விசேட குழுவினரை அனிமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். அனுமதித்தால், ஜெனிவா தீர்மானத்தின் சகல அம்சங்களையும் நாம் எற்றுக்கொண்டதாக ஆகிவிடும் என்று குணதாச அமரசேகர தன் கடிதத்தில் குறிப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com