சீதுவை தடுகம் ஓயாவில் கடல் விமான சேவையின் நுழைவுப் பாதை திறந்து வைப்பு
சீதுவை தடுகம் ஓயா அருகில் அமைக்கப்பட்டுள்ள கடல்விமான சேவையின் (Sea Plan) நுழைவுப் பாதையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, மேல்மாகாண அமைச்சர் நிமல் லான்ஸா உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பெயர் படிகத்தை திரை நீக்கம் செய்து கடல்விமான சேவையின் நுழைவுப் பாதையை திறந்து வைத்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்;த வேலைத் திட்டம் உல்லாசப் பயணத்துறையை முன்னேற்றும் வகையில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
கடல் விமான சேவையினால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் நன்மை அடைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment