Saturday, May 26, 2012

கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை

கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை நீர்கொழும்பு மேலதிக நீதவான் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் நேற்று வெள்ளிக் கிழமை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

சீதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளான கட்டானை, களுவரிப்புவ பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார்.

சந்தேக நபரால் கட்டானை களுவரிப்புவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்த கசிப்பு தயாரிப்ப நிலையத்தை சுற்றநிவளைத்த நீர்;கொழும்பு பொலிஸார் 840 டிரேம்ஸ் கசிப்பு, கோடா டிரேம்ஸ் 7720 மற்றும் கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் நீதிமன்றில் தான் குற்றமற்றவர் என தெரித்தார்.

இந்நிலையில், சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com