எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயினும் இலங்கையராக முன்னேறிச் செல்லக்கூடிய வாய்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைத்திருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எல்ரீரீஈ பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர் நாட்டை அபிவிருத்திப் பாதையில் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர்குறிப்பிட்டுள்ளார். வடபகுதி மக்களின் வாழ்க்கையில் இயல்புநிலை ஏற்பட்டுள்ளது.பிரதேச மீனவர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பிரதேசங்களில் ஓய்வு விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. வடக்கின் ஆயுதக்குழுக்கள் நிராயுதபாணிகளாக மாற்றப்பட்டுள்ளன என்று திரு. கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார். பிபிசி நிறுவனத்துடனான நேர்காணலில் அவர் கருத்து வெளியிட்டார்.
வடக்கு மாகாணம் இலங்கையின் ஒருபகுதியாகும். அதில் வாழும் உரிமை சகல இலங்கையர்களுக்கும் இருக்கவேண்டும். வெளிநாடுகளில் செயற்படும் எல்ரீரீஈ சார்புக் குழுக்கள் இலங்கைக்கு எதிராக போலிக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து முதலீட்டாளர்கள் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் மத்தியிலான ஈர்ப்பை தடுப்பது இந்த முயற்சியின் நோக்கமென திரு. கோட்டபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment