அமெரிக்காவின் மேலுமொரு போலிக்குற்றச்சாட்ட மறுக்கின்றார் இராணுவ பேச்சாளர்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட 2011 ம் ஆண்டுக்கான மனிதவுரிமைகள் செயற்பாடுகள் மீதான நாட்டறிக்கையில் தமிழர் பெரும் பான்மையினராக வாழும் பகுதிகளில் அடிக்கடி பாதுகாப்புப் படையினரும் அரச ஆதரவு துணை இராணுவக் குழுக்களும் மேற் கொள்ளும் சட்டமுரான கொலைகள் இலங்கையின் மனிதவுரிமையில் ஒரு பாரிய பிச்சினையாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வறிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ள ராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரியா மேற்படி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று சட்டமுரணான கொலைகள், ஆட்கடத்தல்கள் இலங்கையில் இடம் பெறவில்லை எனவும் துணை இராணுவக் குழுக்கள் செயற்படவில்லை எனவும் இது இலங்கை பாதுகாப்புப் படைகளுக்குச் சேறு பூசும் இன்னொரு முயற்சியாகும் என்றும் கூறியுள்ளார்.
இராணுவ சீருடையில் படையினர் மட்டுமே ஆயுதந்தரித்துச் செல்கின்றனர் எனவும் தெரிவித்துள்ள அவர் அப்படி சட்ட முரணான செயல்கள் இடம் பெறுமாயின் தமக்கு அறிவிக்குமாறும் தாம் தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறுயள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் அண்மையில் கனடியர் ஒருவர் வன்னியில் கொல்லப் பட்டதற்கு இராணுவத்தைக் குற்றம் சுமத்தினர் ஆனால், இப்போது பொலிசு நால்வரைப் பிடித்திருக்கிறது. அதில் ஒருவர் முன்னாள் புலி என்று வணிகசூரியா குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment