ராஜ் ராஜரட்ணத்தின் பணம். ரவி கருணாநாயக்கவின் கழுத்துக்கு சுருக்கு
புலிகளின் நிதியுதவியாளரும் பல்வேறு சட்ட விரோத செயல்களுக்காக அமெரிக்காவில் 20 வருட சிறைத் தண்டனை அனுபவித்து வருபவருமான ராஜ் ராஜரட்னம் மற்றும் ரவி கருணாநாயக்கா ஆகியோருக்கு இடையிலான சட்டமுரணான வெளிநாட்டுச் செலாவணி தொடர்பான வழக்கு தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம் பெறுகின்றது. போர் நடை பெற்ற காலத்தில் ராஜ் ராஜரட்னம் புலிகளுக்கும் தனது சட்ட விரோத செயற்பாடு களுக்கும் கிரமமாக நிதியதவி வழங்கி வந்ததும் ரவி கருணாநாயக்கா அவரது உள்ளூர் ஒத்தநிலையாளராக செயற்பட்டு வந்ததும் இவ்வழக்கில் தெரிய வருகின்றது.
300 மில்லியன் அமெரிக்க டொலர் பணப் பரிமாற்றை அரசு கண்டு பிடித்ததன் பேரில் இந்த ஒளிவுமறைவான நிதியளிப்பு விடயம் வெளிச்சத்துக்கு வந்தது. ராஜ் ராஜரட்னம் இப்போது 20 ஆண்டுகளுக்கு அமெரிக்கச் சிறையில். ஆனால், ரவியோ இங்கு சுதந்திரமாகத் திரிகின்றார்.
தற்போது கிடைக்கும் சான்றுகளின்படி ரவி கருணாநாயக்காவுக்கும் 20 ஆண்டுகள் சிறைவாசம் கிடைக்கலாம். மிக விரைவில் வெலிக்கடைச் சிறையிலிருந்தும் அமெரிக்காவின் மசாசூசட்ஸ் டெவன் சிறையிலிருந்தும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அளவளாவிக் கொள்ளலாம்.
0 comments :
Post a Comment