ஜனாதிபதி செயலகத்திற்கு மாற்றப்பட்டார் எமில்டா! பதவி ஏற்றமா? இறக்கமா?
யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் இடமாற்றப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இமெல்டா ஜனாதிபதி செயலகத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். இவரது இடத்திற்கு இதுவரை மட்டக்களப்பு அரசாங்க அதிபராகப் பணியாற்றிவந்த சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை வவுனியா அரசாங்க அதிபராகப் பணியாற்றிவந்த பி எம் எஸ் சார்ள்ஸ் மட்டக்களப்புக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும், தென்பகுதியிலிருந்து சிங்கள மொழிபேசும் ஒருவர் வவுனியா அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
0 comments :
Post a Comment