Monday, May 28, 2012

சுரண்ட புலிக் கொடியும், பெனியன் வியாபாரமும், காணாமல் போகும் கடல்கடந்த ஈழமும்!

கனடாவில் மே 18 அன்று போட்டிபோட்டுக்கொண்ட திருச்செல்வம் கும்பலும், உருத்திரகுமாரன் கும்பலும் பல தமாஷ்களைச் செய்திருக்கிறார்கள்.

குயின்ஸ் பார்க் (ஒண்டாரியோ மாகாண பாராளுமன்ற முன்றல்) உருத்திரகுமாரன் கும்பலினால் பலநாட்களுக்கு முன்னரே பதிவு செய்யப்பட்டதைத் தடுக்க 'ஒற்றுமை' என்றெல்லாம் கதைகளை இரு கும்பலும் பரப்பி மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தனர். உருத்திரகுமாரன் கும்பல் அந்த இடத்தினை விட்டுக் கொடுக்க மறுத்தபடியால் திருச்செல்வம் கும்பல் முன்னர் அறிவித்தபடி ஸ்கார்பரோவில் தமது கூத்தை நடத்தினர். குயின்ஸ் பார்க்கில் அடுத்த நாள் (மே 19 ) சிறு கூட்டத்தையும் திருச்செல்வம் கும்பல் நடத்தியது.

உருத்திரகுமாரன் கும்பல் குயின்ஸ் பார்க்கில் மே 18 இல் கூட்டம் நடத்தியதாக சொல்லப்பட்ட பொழுதிலும் அங்கு மக்கள் அதிகம் கூடவில்லை என்றும் சில ஆட்கள் மட்டுமே வந்து விட்டு விரைவாக மறைந்து விட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. உருத்திரகுமாரனின் உதவிப் பிரதமரான போலி டாக்டர் ராம் சிவலிங்கம் இப்பொழுது தன்னை 'பேராசிரியர்' என்று கப்சா விட்டிருக்கிறார். 'மெக்கானிக்கல் எஞ்சினியரிங் ' துறைப் பேராசிரியராக இருந்தததாக வேறு ஒரு செம புழுகை வெட்கம் மானமின்றி அவிழ்த்து விட்டுள்ளனர். இந்த ஆள் எங்கே படித்தவர் என்ற விபரத்தையே வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் 'பேராசிரியர்' என்று அண்டப் புழுகை விட்டது பற்றி பல தமிழர்கள் சிரியோ சிரி என்று சிரிக்கிறார்கள். அதிலும் ஒருவர் புலிகளின் 'தமிழீழப் பல்கலைக் கழகத்தில்' இரண்டாம் கிளாஸ் படித்து சலூனில் வேலை செய்த தமிழ் செல்வன் உபவேந்தராக இருந்த பொழுது இந்த சிவலிங்கம் 'பேராசிரியராக' இருந்திருப்பாரோ என்று தமாஷ் பண்ணுகிறார்கள். இந்த ஆசாமி படித்த பல்கலைக் கழகம், அல்லது வேலை பார்த்த பல்கலைக் கழகம் பற்றிய தகவல்களை யாராவது தருவார்களா?

முன்னூறு பேரளவில் கூடிய திருச்செல்வத்தைப் பிரதமராகக் கொண்ட ஜனநாயக கடல் கடந்த ஈழத்தின் கூட்டத்தில் மஞ்சள் கலர் பனியன்களில் புலிகளின் தமிழீழம் வரைபடம் அச்சிட்டு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பனியன் பத்து டாலருக்கு விற்கப்பட்டதாகவும் தெரிகிறது. இன்னொரு கருத்த பனியனில் போர் குற்ற நாள் என்று அச்சிடப்பட்டிருந்தது. மாவீரருக்கு அஞ்சலி என்று ஒரு பக்கத்தில் பூ விற்பனையும் நடந்தது.

அங்கிருந்த ஒலிபெருக்கியில் அடிக்கடி ஒரே பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. 'கார்த்திகை பூக்கள், மாவீரர் என்று சொற்கள் வரும் பாடல்கள் கேட்டன. அந்தக் கூட்டத்தில் இரண்டு பேர் புலிக் கொடிகளைக் கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்தனர். அதை அவதானித்த பொலிசாரின் எச்சரிக்கையினை அடுத்து புலிக் கொடிகளைச் சுருட்டிக் கொண்டு அதனைப் பிடித்தவர்கள் தண்ணீரில் நனைத்த நாய்களைப் போல முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நடையைக் கட்டினார்கள். புலிப் பாதிரி இம்மானுவளின் புத்தகமும் விற்பனை செய்யப்பட்டது. கொத்து ரொட்டி விற்பனை நடை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மஞ்சள் பெநியன்களைப் போட்டவர்கள் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு 'புலித்தனமாக' திரிந்தார்கள். அவர்கள் பனியன் போடாதவர்களை 'ஒரு பார்வை'பார்த்தது எரிச்சலை உண்டாக்கியது. கம்பல் ஸ்குயரில் ஜனம் நிறையாததால் வெளியே நின்று பார்த்தவர்களை அங்கு போகுமாறு சில சிறுவர்களை ஏவி விட அவர்களும் வந்து படிக் கட்டுக்களில் உட்கார்ந்திருந்தவர்களை எழும்பி செல்லும்படி கொஞ்சம் அதிகாரத்துடன் முறைத்தனர். அப்போது சிலர் 'உபத்திரவம்' தொடங்கி விட்டது என்று கூறிக் கொண்டு அகன்று விட்டனர்.

வரவர மாமியார் கழுதையானார் என்பது போலக் கனடாவில் இப்பொழுது இந்தக் கூட்டங்களுக்கு மக்கள் போவது குறைந்து கொண்டே வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்துக்களுக்கான குடுமிப் பிடி சண்டையில் இப்பொழுது பல வேடிக்கைககள்
நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. திருச்செல்வம் கும்பலின் கமலவாசன் (உலகத்தமிழர் பத்திரிக்கை ஆசிரியர்) பாவித்த கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. என்ன காரணம் என்று தெரியாத பொழுதிலும் 'இலங்கையரசு'ஏவல் ஆட்களின் மூலம் செய்த காரியம் என்று வதந்திகள் பரப்பி விடப்பட்டுள்ளது. ஆயினும் இந்த இரு கோஷ்டிகளும் எதற்காக மோதுகிறார்கள் என்று சொல்லக் காணோம்! 'கொள்கைப் பிரச்சனையா அல்லது கொள்ளைப் பிரச்சனையா?'

கதிர் ஒளி என்ற பத்திரிகையில் திருச்செல்வத்தையும் நேரு குணரத்தினத்தை மிரட்டினார்கள் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. (மே 01 கதிரொளியைப் பார்க்கவும்). நம்பவே முடியவில்லை. இவர்களையாவது மிரட்டுவதாவது. உலகத்தமிழர் இயக்கத்தின் குண்டர் படையின் தலைவனாக இருந்து செயல் பட்டதே இந்த நேரு குணரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களையே மிரட்டுகிறார்கள் என்றால்? போக்கிரிக்குப் போக்கிரியா?

கனடாவில் கடல் கடந்த ஈழம் என்பது காற்றுப் போன பலூனாகியுள்ளது. மாவீரர், வன்னி மக்கள் என்று இவர்கள் கத்தினாலும் பிரபாகரன் என்ற ஆள் செத்துப்போனது பற்றி மூச்சு விடுகிறார்களில்லை. 'ஈழம், புலி' என்பன இப்பொழுது அறவே மறைந்துள்ளன.

கோண்டாவில் கோதண்டராமன்.

1 comment:

  1. It's still a money spinner and the money makers will never sleep.

    ReplyDelete