நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் - ரணில்
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம் பெற்ற மேதின ஊர்வலத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளால் தொடர்சியாக பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நாட்டு மக்கள் தமது வாழ்க்கைச் செலவினங்களை சமாளிக்க முடியாது திண்டாடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு எதிராக மக்களுடன் இணைந்து தெருவில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தாம் தயாராக இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment