Tuesday, May 15, 2012

ஜெனிவா அமர்வுகளின்போது பொறுப்புடன் செயற்பட்ட ஊடகங்களுக்கு ஜனாதிபதி நன்றி

அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை முற்பகல் அலறி மாளிகையில் சந்தித்த ஜனாதிபதி ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு நடைபெற்ற போது, நாட்டின் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து பொறுப்புடன் செயறபட்ட சகல ஊடக நிறுவனங்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

அங்கு உரையாற்றிய அவர் ஊடகங்கள் என்றும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இனங்களுக்கு இடையேயும் மதங்களுக்கு இடையேயும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் ஊடகங்களுக்கு பாரிய பொறுப்புண்டு. மிகவும் அனுதாபத்திற்குரிய விடயங்களை ஆவேசத்துடன் வெளியிடுவதிலும் பார்க்க நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடுவதன் முக்கியத்துவத்தை தெளிவுப்படுத்தினார். சில சம்பவங்களை திரிபுபடுத்தி கூறுவதிலும் பார்க்க மக்களுக்கு பயன்பட கூடிய வகையில், ஆத்திரமடையக்கூடிய நிலைமைகளை உருவாக்காத வகையில் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். ஊடக நிறுவனங்கள் குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்ட போதிலும் நாட்டில் குற்றச் செயல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பொலிஸார் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்ட போதிலும் பொலிஸார் பக்கசார்பற்ற வகையில் தமது பணியினை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாட்டில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் உண்மையிலேயே போதை பொருள் கடத்தல்கள் முறியடிக்கப்பட்டு அதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்து விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையே இது தெளிவுப்படுத்துகின்றது. இதனை போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதென்பதாக குறிப்பிடுவது பாரிய குற்றமாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் வகையில் ஊடகங்கள் செயற்பட வேண்டிய முக்கியத்துவத்தினையும் அவர் அங்கு வலியுறுத்தினார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com