Thursday, May 24, 2012

இலங்கையை சேர்ந்த கனேடிய பிரஜையின் கொலையுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் கைது

கிளிநொச்சி பகுதியில் இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கனேடிய பிரஜை ஒருவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்கள் நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அருளம்பன் அகிலன், அப்பாகு ஆனந்தராஜா, நல்லுசாமி பாலச்சந்திரன் மற்றும் அபேசிங்க முதியன்சலாகே மைக்கல் பிரதீப் குமார ஆகிய நான்கு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டு சந்தேகநபர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் உட்பட கொலை செய்யப்பட்டவரின் கையடக்கத் தொலைபேசிகள் இரண்டு, மடிகணினி என்பனவும் மோட்டார் சைக்கிள், என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் இருந்து வந்த குறித்த நபர் அவருடைய கிளிநொச்சி காணியில் வீடு ஒன்றை அமைத்து வந்துள்ள நிலையிலேNயு இவரிடம் அதிக பணம் இருப்பதாக எண்ணி அவற்றை பெற்றுக் கொள்ளவென இக்கொலை புரியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

1 comment:

  1. This canadian orgin is Kayts and not Kilinochchi , and sritharan MPs medias writing like wrong news , that why i had doubt at this murder involved Sritharan MP

    ReplyDelete