Tuesday, May 22, 2012

முஸ்லிம் பாதாளக்குழுக்கள் ஜிகாத்துடன் இணைந்து முஸ்லிம் அடிப்படைவாதத்தை பரப்புகின்றது

கொழும்பு, புத்தளம், மன்னார் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இயங்கி வரும் பிரபல பாதாள உலகக் குழு இணையத்தின் ஊடாக வலையமைப்பொன்றை உருவாக்கி 'ஜிகாத்' என்ற முஸ்லிம் அடிப்படைவாத கோட்பாடை இந்த நாட்டில் முஸ்லிம் மக்களிடையே பரப்பி வருகின்றது என்று பாதுகாப்பு புலனாய்வுத்துறையினர் அரசுக்கு அறிக்கையிட்டுள்ளனர் என திவய்ன செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த முஸ்லிம் பாதாள உலகக் குழுக்கள், போதைப் பொருளை இலங்கைக்குக் கடத்துதல் உட்பட பல சட்டவிரோத வியாபாரங்களை சுதந்திரமாகச் செய்து கொண்டிருப்பதாக விசேட அறிக்கையூடாக அரசுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

ஜிகாத் என்ற பெயரில் அடிப்படைவாத கோட்பாட்டை நோக்கி முஸ்லிம் மக்களை இட்டுச் செல்வதற்காக இந்த பாதாள உலகக் குழுவினர் தாம் வசிக்கும் பிரதேசத்தை உத்தியோகபூர்வமற்ற அதிபாதுகாப்பு வலயமாகக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிய வருகின்றது.

யாராவது வெளியார் அந்த உத்தியோக பூர்வமற்ற பாதுகாப்பு வலயத்துக்குள் செல்வதாயின் குறிப்பிட்ட பாதாள குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் வெளியார் தங்கியிருக்கும் வீட்டாருக்குத் தண்டணை வழங்குவதும் இடம் பெறுகின்றது.

தமக்குரிய பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்களை அரசு சாதாரண சட்டத்துக்கு அமைய நடாத்தும் போது, இந்த பாதாளக் குழு அவர்ளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. ஏதேனும் பிரச்சினை ஏற்படும் சமயத்தில் பொலிசுக்குப் போகாமல் அவர்களே அதைத் தீர்த்து வைப்பதாக அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என்று புலனாய்வுத் துறை விசாரணைகள் மூலம் தெரிய வருகின்றது.

No comments:

Post a Comment