சர்வதேச பாடசாலை நெறியாள்கை சட்டம் விரைவில்
சகல சர்வதேச பாடசாலைகளையும் நெறியாள்கை செய்வதற்காக பாராளுமன்ற சட்ட வரைபு ஒன்று விரைவில் கொண்டு வரப்படுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டப் பிரமாணங்கள் விரைவில் புதிய கல்விச் சட்ட வரைபாகப் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படும்.
தொலைத்தொடர்பு சீராக்கல் ஆணைக்குழு தொலைத்தொடர்பு சேவா வழங்குனர்களைக் கண்காணித்து வருகிறது. சேவா வழங்குனர்கள் இப்பிரமாணங்களைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறே சர்வதேச கல்லூரிகளுக்கும் நெறியாள்கை அமைப்பொன்று இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பாடசாலைகள் சுருட்டுக் கடைகள் போன்று நடத்த முடியாது. சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரங்களுக்கு ஏற்ப அவை இயங்க வேண்டுமென்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment