அரச அதிகாரிகளுக்கு பட்டப் பின் படிப்பை தொடர ஜப்பானின் புலமைப்பரிசில்
இலங்கையின் அரச அதிகாரிகளுக்கு பட்டப் பின் படிப்பை தொடர்வதற்கான புலமைப்பரிசினை வழங்க ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் இதற்கான வசதியை வழங்குகிறது.இதற்காக 340 கோடி ரூபா செலவிடப்படும்.
இலங்கையின் மனிதவள அபிவிருத்திக்குத் தேவையான தனிநபர், மற்றும் நிறுவன வசதிகளை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.
முதல் கட்டமாக 15 அதிகாரிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும்.
2014ம் ஆண்டுவரை அமுலாகும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் 60 அரச அதிகாரிகளுக்கு புலமைப்பரிசில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜப்பான் அரசாங்கம் 2010ம் ஆண்டு முதல் இலங்கையின் மாணவர்களின் பட்டப் பின் படிப்புக்காக நிதியுதவிகள் வழங்குகிறது.இலங்கையைச் சேர்ந்த 30 மாணவர்கள் ஜப்பான் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கிறார்கள்.
0 comments :
Post a Comment