இராணுவ ஒத்துழைப்பில் சீனா, அமெரிக்கா.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே இராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக முன்னேற்றமன இணக்கம் ஏற்பட்டுள்ளது என்று வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அண்மையில் சீன பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனட்டாவுடன் கலந்துறையாடிய போது இவ்வாறு குறிப்பிட்டார்.
இருநாடுகளுக்கும் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்துவது பயனுள்ளது என்பதால் ஜனாதிபதியின் இணக்கத்துடன் இந்த விஜயம் மேற் கொள்ளப்பட்டது.
நாடுகளுக்கடையில் ஒத்துழைப்பை வளர்ப்பதே அடிப்படை நோக்கம் என்றும் அவர் கூறினார். விசேடமாக பல்லாண்டுகளாக இரு நாடுகளுக்கிடையே இராணுவச் செயற்பாடுகள் சம்பந்தமான வேறுபாடுகள் காரணமாக பகைமை உணர்வு நிலவுகின்றது. மேலும் வேவு விமானங்கள், கப்பல்கள் தொடர்பான சட்டம் இருநாடுகளுக்கு இடையில் பிணக்குகளை ஏற்படுத்தியது.
இந் உடன்பாட்டின் படி சீனா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இராணுவச் செயற்பாடுகள் சம்பந்தமாக சமாந்தரமான நடவடிக்கைகள் இடம் பெறும். இதன் ஊடாக இரண்டு நாட்டு இராணுவங்களுக்கு இடையில் நெருங்கிய நட்புணர்வு ஏற்பட வாய்ப்புண்டு இன்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பெனட்டா கூறினார்.
0 comments :
Post a Comment